Home கலை உலகம் வெளியான 6 நாளில் 230 கோடி வசூலித்துப் ‘பாகுபலி’ உலக சாதனை!

வெளியான 6 நாளில் 230 கோடி வசூலித்துப் ‘பாகுபலி’ உலக சாதனை!

588
0
SHARE
Ad

pakuசென்னை, ஜூலை 16- மிகப் பிரமாண்டமானமுறையில் 250 கோடி ரூபாய்ச் செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படம், ஜூலை 10 அன்று வெளியானது.

வெள்ளியில் இருந்து புதன் வரை சுமார் 230 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ள “பாகுபலி” திரைப்படமானது, இந்திய சினிமா வரலாற்றில் வெளியான 6 நாட்களில் அதிக் அளவில் வசூலை வாரிக் குவித்த முதல் படமாகச் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும்  சக்கைப் போடு போடுகிறது.

#TamilSchoolmychoice

பாலிவூட்டில் வெளியான “ஹாப்பி நியூ இயர்” மற்றும் “பி கே ” ஆகிய படங்களின் முதல் வார வசூலைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது “பாகுபலி”.