Home இந்தியா ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்; இந்தியா மறுப்பு

ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்; இந்தியா மறுப்பு

530
0
SHARE
Ad

fliபுதுடெல்லி, ஜூலை 17- இந்தியப்படையின் ஆளில்லா விமானம் நேற்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது. எனினும், இதில் நாசவேலைக்கான வாய்ப்பு எதுவும் இல்லை என இந்திய விமானப்படை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம் சர்வதேசச் சட்ட விதிகளை மீறிப் பறந்ததாகவும், அதைச் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்திய ராணுவமும், விமானப்படையும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளன. தங்களுடைய ஆளில்லா விமானம் சுட்டுத் தள்ளப்படவும் இல்லை; மோதவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice