Home கலை உலகம் இந்திப் படங்களில் நடிப்பது ஏன்?- தனுஷ் பதில்

இந்திப் படங்களில் நடிப்பது ஏன்?- தனுஷ் பதில்

533
0
SHARE
Ad

dhanush_in_kuttiசென்னை,ஜூலை 17- நடிகர் தனுஷ் தமிழ்ப் படங்களில் நடிப்பதோடு, இந்திப் படங்களிலும் அதிக ஆர்வத்தோடு நடித்து வருகிறார்.அவர் நடித்த இந்திப் ப்டங்களும் அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், மாரி பட வெளியீட்டின் போது தனுஷ் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களைப் பகிந்து கொண்டுள்ளார்.

அப்போது, “இந்திப் படங்களில் நடிப்பது அதிக அளவில் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காகவா? அல்லது பெரிய அளவில் புகழ் பெற வேண்டும் என்பதற்காகவா?”என்ற கேள்விக்கு அவர் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இரண்டுமே கிடையாது. பணத்திற்கோ புகழுக்கோ அதிக அளவில் நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழ்ப் படங்களை விட, இந்திப் படங்களுக்குக் குறைந்த சம்பளம்தான் வாங்குகிறேன்.

சினிமாவுக்கு இன-மொழி பேதம் கிடையாது. அந்த வகையில், இன்னொரு மொழியில் நடித்தோம் என்ற திருப்திக்காகவே இந்திப் படங்களில் நடிக்கிறேன்.

நான் நடித்து வெளிவந்த இரண்டு இந்தி படங்களுக்குமே அங்கே நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். இந்தி பட உலகைச் சேர்ந்தவர் கள் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்கள்’’ என்று அழகாகப் பதில் கூறியுள்ளார்.