Home இந்தியா காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்க அவசர ஆலோசனை!

காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்க அவசர ஆலோசனை!

492
0
SHARE
Ad

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????புதுடெல்லி,ஜூலை 17- இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003–ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஏற்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, எல்லையில் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தி வருகிறது பாகிஸ்தான்.

மேலும், பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் ரஷியாவில் உபா நகரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து அமைதி திரும்பி விடும் என்று நம்பிய ஜம்மு,காஷ்மீர் மக்களின் நம்பிக்கை பொய்க்கும் விதத்தில் பாகிஸ்தான், மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவது அந்தப் பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 முறை கனாசாக், அக்னூர் செக்டார் பகுதிக் கிராமங்களைக் குறி வைத்துப் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடும் பீரங்கித் தாக்குதலும் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பொலிதேவி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 2 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியா, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்துத் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

ஆனாலும், ஆர்.எஸ்.புரா, தாவி பகுதிகளில் 5 எல்லைச் சாவடிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்று அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.

இதேபோன்று பூஞ்ச் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் படையினர் இந்திய ராணுவத்தின் பல்வேறு நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர்.

எல்லைப் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தத் தொடங்கி இருப்பதால், எல்லையோரப் பகுதியில் வாழ்கிற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுமாறு, ஜம்மு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்க, மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் உயர் மட்டக்குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பதில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது.