Home இந்தியா தமிழகத்துக் காய்கறிகளுக்குக் கேரளாவில் தடை!

தமிழகத்துக் காய்கறிகளுக்குக் கேரளாவில் தடை!

640
0
SHARE
Ad

vegetablesசென்னை, ஜூலை 18- தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் காய்கறிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் கேரள உணவுத்துறை அமைச்சர் அணுப் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

காய்கறிகளில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தால் கேரளாவில் அதிகம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வரும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்பு அதிகமாக இருப்பதாகப் புகார் வந்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்திலிருந்து வரும் பால், இறைச்சிக்கும் தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

 காய்கறி ஏற்றி வரும் வாகனங்களுக்குப் புதிய கட்டுப்பாடு:

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்களுக்குக் கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இனிமேல்,உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

தர நிர்ணயச் சான்று இல்லாமல் வரும் வாகனங்கள் கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்படும்.

இந்தப் புதிய கட்டுப்பாடு ஒருவாரத்தில் அமலுக்குவரும் என்று கேரள அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.