Home இந்தியா கூட்டணிக்குச் சம்மதம், ஆனால் ஆட்சியில் பங்கு – திமுகவிற்கு இளங்கோவன் கொடுத்த அதிர்ச்சி!

கூட்டணிக்குச் சம்மதம், ஆனால் ஆட்சியில் பங்கு – திமுகவிற்கு இளங்கோவன் கொடுத்த அதிர்ச்சி!

632
0
SHARE
Ad

Karunanidhi with Stalinசென்னை, ஜூலை 18 – எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தலை தனித்து சந்திக்கும் தைரியம் ஜெயலலிதாவிற்கு இருந்தாலும், ஜெயலலிதாவை தனித்து எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை. சமீபத்திய கூட்டங்களில் கூட, “மக்கள் தொடர்ந்து திமுக-வை நன்றி மறந்து ஏமாற்றி வருகின்றனர்” என தனது ஆதங்கத்தை வாய் விட்டு தெரிவித்துவிட்டார்.

அதனால் எதிர்வர இருக்கும் தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக மற்றும் இதர கட்சிகளை ஒன்றிணைத்து ஜெயலலிதாவை வீழ்த்த வலுவான திட்டங்களை திமுக முன்னின்று நடத்தி வருகிறது. அதற்கு அச்சாரமாகவே சமீபத்தில் காங்கிரசுக்கு ஸ்டாலின் காய் நகர்த்தினார்.

“ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி அமைப்போம்” என அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அதற்கு சம்மதம் என்பது போலவே பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், மேலிடத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, நேற்று கூட்டணி பற்றி இளங்கோவன் பேசிய விதம் திமுக-வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

#TamilSchoolmychoice

தேர்தல் கூட்டணி தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்கவே முயற்சி செய்து வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் விட்டுச் சென்ற ஆட்சியை நாங்கள் மீண்டும் மலரச்செய்வோம்.”

“ஒருவேளை தமிழகத்தில் திமுக-வுடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் அதற்கு ஒத்துழைக்கும். தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி திமுக-வும், காங்கிரசும் தான். இது தொடர்பாக இறுதி முடிவை கட்சி மேலிடம் அறிவிக்கும். எனினும், கூட்டணி பேச்சுவார்த்தைகள், ஆட்சியில் பங்கு என்று உறுதி அளிக்கும் கட்சியுடன் தான் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

எப்படியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அதைக் காரணம் கூறி, விஜயகாந்தை வளைத்துவிடலாம் என திட்டம் போட்ட திமுகவிற்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.