சென்னை – தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நேற்று திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ளது. உடுமலைப்பேட்டையில் அதிகபட்ச மழையாக நேற்று 12 செ.மீ மழை பெய்துள்ளது.
இதனையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் மண்டல இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், “மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.