போபால் – பாதுகாவலரைக் கொலை செய்து விட்டு, போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 8 சிமி பயங்கரவாதிகள், மாலிகேடா என்ற கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த போது, அவர்களைச் சுற்றி வளைத்த மத்தியப் பிரதேச காவல்துறை மற்றும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு, சுட்டுக் கொன்றது.
காவல்துறையை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தியதால், பதில் தாக்குதல் நடத்தவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறைத் தரப்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த சில மணி நேரங்களில், காணொளி ஒன்றுறு நட்பு ஊடகங்களில் பரவியது. அதில் மலை முகடு ஒன்றின் மேல் சிலர் நிற்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவது போல் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதனையடுத்து, இச்சம்பவத்தின் உண்மைத் தன்மை கேள்விக் குறியாகியுள்ளது. அவ்வளவு பாதுகாப்பான சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பியது எப்பது? அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தது எப்படி? அந்த காணொளியைப் பதிவு செய்தது யார்? உள்ளிட்ட பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.