Home Featured நாடு முலுவில் மாயமான ஆஸ்திரேலியரின் குடும்பத்தினர் மலேசியா வருகை!

முலுவில் மாயமான ஆஸ்திரேலியரின் குடும்பத்தினர் மலேசியா வருகை!

701
0
SHARE
Ad

muluமிரி – முலு தேசியப் பூங்காவில் மாயமான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரியூ கேஸ்கெல் என்ற சுற்றுலாப் பயணியைத் தேடும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை மலேசியாவிற்கு வந்தனர்.

ஆண்ட்ரியூ கேஸ்கெல்லின் தந்தை டேவிட் கேஸ்கெல் மற்றும் அவரது இன்னொரு மகன் பெண்ட் ஆகிய இருவரும் தேடுதல் குழுவினரோடு நேற்று இணைந்து கொண்டனர்.

இது குறித்து மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் துணை இயக்குநர் ஃபார்ஹான் சஃப்யான் போர்ஹான் கூறுகையில், கே9 குழு, பொது இயக்க படை உள்ளிட்ட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 43 பேர் இத்தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice