Home Featured நாடு முலுவில் மாயமான ஆஸ்திரேலியர் உயிருடன் மீட்கப்பட்டார்!

முலுவில் மாயமான ஆஸ்திரேலியர் உயிருடன் மீட்கப்பட்டார்!

603
0
SHARE
Ad

muluமிரி – முலு தேசியப் பூங்காவில் மாயமான ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஆண்ட்ரியூ கேஸ்கெல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 20-ம் தேதி முலு தேசியப் பூங்காவில் தனியாகப் பயணம் செய்த அவர், அன்று மாயமானார்.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மிரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமைக் கண்காணிப்பாளர் லா போ கியாங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிற்பகல் 3 மணியளவில் ஆண்ட்ரியூ கேஸ்கெல் மிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.