சென்னை, ஜூலை 19 – கடலில் இருந்து மீட்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்புப்பெட்டியை ஆய்விற்காக கனடாவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி, ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஒத்திகையின் போது கடலோர காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் காணாமல் போனது. இந்நிலையில், அந்த விமானத்தின் கருப்புப்பெட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டது.
கடலூர் அருகே உள்ள பிச்சாவரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட அந்த கருப்புப்பெட்டியின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனால், அந்த கருப்புப்பெட்டி தயாரிக்கப்பட்ட கனடாவிற்கே அதனை ஆய்விற்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு வெளியான பின்பே விமானம் என்ன காரணத்திற்காக விபத்திற்குள்ளானது என்பது தெரியவரும்.