Home இந்தியா எலும்புகளை வைத்து என் மகனை எப்படி அடையாளம் காண்பேன்? – விமானியின் தந்தை கண்ணீர்!

எலும்புகளை வைத்து என் மகனை எப்படி அடையாளம் காண்பேன்? – விமானியின் தந்தை கண்ணீர்!

637
0
SHARE
Ad

subash-sureshசென்னை, ஜூலை 15 – “அதிகாரிகள் மீட்டதாகக் கூறும் எலும்புகளை வைத்து என் மகனை நான் எப்படி அடையாளம் காண்பேன்?” – என கடலில் விழுந்து விபத்திற்குள்ளான டோர்னியர் விமானத்தின் விமானி சுபாஷ் சுரேஷின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விமானியின் தந்தை சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “கடற்படை அதிகாரிகள் எனக்கு ஒரு கைக்கடிகாரத்தையும், கைத்துண்டு ஒன்றையும் காட்டினர். இதில் கைக்கடிகாரம் என் மகனுடையது இல்லை. ஆனால் கைத்துண்டு என் மகன் பயன்படுத்தியது தான். மேலும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தாங்கள் மீட்டதாகக் கூறும் எலும்புக் கூடுகளை எங்களிடம் காட்டி இதில் என் மகனை அடையாளம் காணுமாறு கூறுகின்றனர். வெறும் எலும்புகளை வைத்தது என் மகனை எப்படி காண்பேன்” என்று அவர் துயரத்துடன் தெரிவித்துள்ளார்.

விமானி சுபாஷ் பயன்படுத்திய காரையும், கடற்படைத் தளத்தில் இருந்து அவரது வீட்டிற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். அதில், சுபாஷின் தொப்பி மட்டும் மீதம் இருப்பது அவரது குடும்பத்தினரை கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி உள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, நேற்று, சம்பவம் நடந்த பகுதியில் இருந்து அதிகாரிகள் மீட்டதாகக் கூறும் எலும்புக் கூடுகளை, மரபணு பரிசோதனைக்கு அனுப்ப உள்ளனர் என்று கடற்படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.