Home நாடு 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டேனா? காலிட் அபுபாக்கர் மறுப்பு!

20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டேனா? காலிட் அபுபாக்கர் மறுப்பு!

720
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 19 – வலைப்பதிவாளர் பாபாகோமோ மீதான வழக்கைக் கைவிட 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகாரை காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கார் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Khalid-Abu-Bakarஇது தொடர்பான உரையாடல் பதிவொன்று வாட்ஸ் அப் மூலம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐஜிபியின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது.

‘பாபாகோமோ ஒரிஜனல்’ என்ற பெயருடன் கூடிய முகநூல் பக்கத்தில், அதன் வலைப்பதிவருக்கும் காலிட் அபுபாக்கருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடல் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

இது தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக காலிட் தெரிவித்துள்ளார்.

லோ யாட் மோதல் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார் பாபாகோமோ (படம்). இந்நிலையில் அவர் மீதான வழக்கைக் கைவிட காலிட் அபுபாக்கார்  20 ஆயிரம் ரிங்கிட் கேட்பதாக அந்த ஒலிப்பதிவு உரையாடலில் உள்ளது.

Blogger Papagomo“விசாரணைக்கு உதவும் வகையில் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது. அக்குறிப்பிட்ட முகநூல் பக்கம் பாபாகோமோவினுடையது அல்ல என அவரது வழக்கறிஞரும் தெளிவுபடுத்தி உள்ளார்,” என்றார் காலிட் அபுபாக்கர்.

இதற்கிடையே, பாபாகோமோ ஒரிஜினல் என்ற பெயரிலான முகநூல் பக்கத்தில் இனத் துவேஷத்தை தூண்டும் விதமான கட்டுரைகள் எதையும் தனது கட்சிக்காரர் வெளியிடவில்லை என பாபாகோமோவின் வழக்கறிஞர் அகமட் சோயப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சில பதிவுகள் வெளியானபோது, பாபாகோமோ தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அகமட் சோயப், அத்தகைய பதிவுகளுக்கும் பாபாகோமோவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.