Home நாடு சைட் சாதிக் விவகாரத்தில் பாபாகோமோ விடுவிக்கப்பட்டார்!

சைட் சாதிக் விவகாரத்தில் பாபாகோமோ விடுவிக்கப்பட்டார்!

896
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக்கைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட அம்னோ இளைஞர் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸை காவல் துறையினர் இன்று புதன்கிழமை விடுதலை செய்தனர்.

குற்றம் சாட்டும் அளவிற்கு, வான் அஸ்ரி தீவிரமான குற்றம் ஏதும் செய்யவில்லை என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறைத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நூர் ரசிட் இப்ராகிம் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஞாயிறு அன்று பாபாகோமோ இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரை தாக்க முயன்றதாக காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

அது குறித்த காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மக்களும் காவல் துறையினரும் அதனை ஆதாரமாகக் கொள்ளலாம் எனவும் பாபாகோமோ இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, பொய்யான புகாரை அளித்துள்ளதாகக் கூறி சைட் சாதிக் மீது பாபாகோமோ காவல் துறையில் மீது புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

22 வினாடி காணொளியில், சைட் சாதிக், தேசிய முன்னணி ஆதரவாளர்களால் சூழப்பட்டக் காட்சி கடந்த சனிக்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அச்சம்பவத்தில் பாபாகோமோ தனது கழுத்தை இறுக்கிப்பிடித்துக் கொண்டதாக சைட் சாதிக் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.