Home இந்தியா ஓடும் ரயிலிலும் இனி பீட்சா பதிவு செய்யலாம்: இருக்கைக்கே தேடி வரும்!

ஓடும் ரயிலிலும் இனி பீட்சா பதிவு செய்யலாம்: இருக்கைக்கே தேடி வரும்!

496
0
SHARE
Ad

Pizza_02புதுடெல்லி, ஜூலை 20-இந்திய ரயில்வே நிர்வாகம், பிரபல பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸ் உடன் சேர்ந்து பயணிகளுக்கு ஓடும் ரயிலிலேயே பீட்சா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

முதற் கட்டமாக, புதுடெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா, ஆல்வார், அம்பாலா, ஜலந்தர், மதுரா, முசாபர்நகர், பதன்கோட், வாபி, பரூச் மற்றும் வதோதரா முதலிய 12 ரயில் நிலையங்களில் இந்தச் சேவை துவங்கவிருக்கிறது.

இணையம் மற்றும் தொலைபேசி அழைப்பு மூலமாக  டோமினோஸ் பீட்சாவைப் பெறலாம்.

#TamilSchoolmychoice

அதாவது,பயணிகள் 1800-1034-139 மற்றும் 01202383892 எண்களுக்குத் தொடர்புகொண்டு கட்டணமில்லா அழைப்பின் மூலமோ அல்லது 139 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலமோ தங்களின் பி.என்.ஆர். மற்றும் இருக்கை எண்ணை அனுப்பி, பீட்சாவைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் பீட்சாவைத் தங்களது இருக்கையில் இருந்தபடியே  வர வைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

பயணிகளிடையே இதற்குள்ள வரவேற்புக்குத் தக்கபடி, மற்ற பகுதிகளுக்கும் இந்தச் சேவை அதிகரிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.