Home தொழில் நுட்பம் டுவிட்டரில் வட்டார மொழிகள் – டுவிட்டர் இந்தியா தலைவர் அறிவிப்பு!

டுவிட்டரில் வட்டார மொழிகள் – டுவிட்டர் இந்தியா தலைவர் அறிவிப்பு!

483
0
SHARE
Ad

Raheel-Khursheedபுது டெல்லி, ஜூலை 20 – இந்தியாவில் டுவிட்டரை பயன்படுத்துவதற்கு மொழி தடையாகி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு வட்டார மொழிகளை டுவிட்டரில் மேம்படுத்த டுவிட்டர் இந்தியா (Twitter India) நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை, டுவிட்டர் இந்தியாவின் தலைவர் ரஹீல் குர்ஷீத்(படம்) பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.

டுவிட்டர் இந்தியாவின், வளர்ச்சி பற்றி பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ரஹீல் குர்ஷீத் சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது, இந்தியாவில் டுவிட்டருக்கு, மொழி தடையாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த விஷயத்தில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றோம். வரும் காலாண்டில், அதிகமான முன்னேற்பாடுகளை நீங்கள் பார்க்கலாம். டுவிட்டரை அனைத்துலக அளவிலும், தேசிய அளவிலும் மட்டும் பிரபலப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.”

“அதனை ஒவ்வொரு கிராமங்களுக்கும் எடுத்துச் செல்வதே எங்கள் இலக்கு. வெகு விரைவில் டுவிட்டரில் வட்டார மொழிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாது இரண்டாம் மற்றும் மூன்றாம் தர சிற்றூர்களும் பயன்பெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சமூக ஊடகங்கள் வந்ததில் இருந்து செய்திகள் படுவேகமாக பரவுகிறது. அதே சமயம், சைபர் தாக்குதலும் அதிக அளவில் உருவாவது பற்றி அவர் கூறுகையில், “டுவிட்டர் மிகப் பெரிய ஜனநாயக ஊடகம். இதில் யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், அது எல்லை மீறும் போது நாங்கள் அதனை கட்டுப்படுத்துகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.