தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் பேசும் போது, ”தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பலரும்ஓய்வெடுக்கச் சொல்கின்றனர். நாங்கள் யாரையும் ஓய்வு எடுக்கச் சொல்வதில்லை. நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், நாவை அடக்கிப் பேசுகிறேன். இனி யாராவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பற்றி பேசினால், அவர்களின்நாக்கை வெட்டுவேன்”என்று ஆவேசமாகக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழகத் தொழில் துறை அமைச்சர் தங்கமணி இதற்கு வருத்தம் தெரிவித்தார். ”எதிர்க்கட்சியினர் தான் அரசியல் நாகரிகம் தெரியாமல் பேசுகின்றனர். அவர்களைப் போல், நாமும் பேசக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதில் எனக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. நாம் அரசியல் நாகரிகம் அறிந்து பேச வேண்டும்” என்றார்.