கோலாலம்பூர், ஜூலை 21 – 1எம்டிபி விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்பு பணிக்குழு, மேம்பாட்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவுடன் நேற்று கைது செய்துள்ளது.
அந்த நபர் நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
அந்த 39 வயது மதிக்கத்தக்க நபர் மிகப் பெரிய சொத்து மற்றும் மேம்பாட்டு நிறுவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இது குறித்து அவரது வழக்கறிஞரான முகமட் சஃபி அப்துல்லா, இது ஒரு தேசிய அளவிலான விவகாரம். விசாரணை அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் வைக்க அனுமதி கேட்டனர். ஆனால் நீதிபதி 4 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
1எம்டிபி சிறப்பு விசாரணைக் குழு, மலேசிய காவல்துறையினர், சட்டத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பேங்க் நெகாரா அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.