Home கலை உலகம் ரஜினிகாந்த் மீது கடன் வழக்கு: 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு!

ரஜினிகாந்த் மீது கடன் வழக்கு: 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு!

514
0
SHARE
Ad

rajiniசென்னை, ஜூலை 21- சினிமாவிற்குக் கடன் வழங்கும் (ஃபைனான்சியர்) முகுந்த் சந்த்போத்ரா என்பவர் தொடுத்த வழக்கில், பதில் வழக்குத் தொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால், அந்தப் பதில் மனுவில் நடிகர் ரஜினிகாந்த் தவறான தகவல் தந்திருப்பதாகக் கூறி, ரஜினிகாந்த் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் முகுந்த் சந்த்போத்ரா.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த்போத்ரா என்பவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவிற்கு எதிராகக் கடன் ஏய்ப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்திக் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், இயக்குநர் கஸ்தூரிராஜா சம்பந்தி என்பதால் அவருக்குத் துணை போகிறார் ரஜினிகாந்த் என்று அவர் மீதும் வழக்குத் தொடுத்தார் போத்ரா.

#TamilSchoolmychoice

அதற்கு ரஜினிகாந்த்,” நான் யாருக்கும் கடன் வாங்க உத்தரவாதம் தரவில்லை. என்னிடம் பணம் பறிக்கவே போத்ரா இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்” என்று பதில் வழக்குத் தொடுத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சில தவறான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதாக முகுந்த் சந்த்போத்ரா குற்றம் சாட்டியிருந்தார்.

எனவே, இது தொடர்பாக , ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போத்ரா கூறியுள்ளார். இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனுவிற்கு இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்கும் படி நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரி ராஜா ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.