அவர் தன் புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “ராசிபுரம் புதுப் பேருந்து நிலையத்தில் கடந்த 18ம் தேதி இரவு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் பேசும்போது, ‘இனி ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிக் கூறுபவர்களின் நாக்கை வெட்டுவோம் ‘ என அரசியல் கட்சி தலைவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
பொது மக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையத்தில் பேசியுள்ளதால், இனி வரும் காலங்களில், பொது மக்களும் இத்தகைய செயலில் ஈடுபட முன்னுதாரணமாக இது அமைந்துவிடும். அவரது பேச்சு மிகப்பெரும் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.
அவரது பேச்சால், அனைவரின் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தோரணையில் பேசியுள்ளார். எனவே, இவர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவரைப் போலவே முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன்,“தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்துப் பேசினால், நாக்கை வெட்டுவேன்’ எனக்கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்படும். நடவடிக்கை இல்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்,” எனக் கூறியுள்ளார்.