Home உலகம் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி! 

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி! 

520
0
SHARE
Ad

lousinaலூசியானா, ஜூலை 24 – அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள லஃபாயேட் நகரில், திரையரங்கம் ஒன்றில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லஃபாயேட் நகரின் ஜான்ஸ்டன் பகுதியில் இருக்கும் கிராண்ட் திரையரங்கில், நேற்று இரவு 7 மணியளவில் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவன், திரை அரங்கிற்குள் இருந்த பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். இந்த தாக்குதலில் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. பலரை துப்பாக்கியால் சுட்ட காயப்படுத்திய அவன், பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் அறிந்தவுடன் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

லூசியானா மாகாண ஆளுநர் போபி ஜிண்டால், காவல்துறை அதிகாரிகளுடன் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் துப்பாக்கிகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை” என்று கூறியிருந்தார். அவர் பேட்டி அளித்த அடுத்த சில மணி நேரங்களுக்குள் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.