Home இந்தியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்கத் திட்டம்!

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்கத் திட்டம்!

559
0
SHARE
Ad

vuராமநாதபுரம், ஜூலை 24- விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும்  தொடங்கத் திட்டமிட்டிருப்பதாக, வாகன சோதனையில் சிக்கிய கிருஷ்ணகுமார் என்பவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20-ஆம் தேதி இரவு ராமநாதபுரம் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது சயனைடு குப்பிகள், ஐபிஎஸ் கருவி மற்றும் ஆயுதங்களுடன் கிருஷ்ணகுமார், ராஜேந்திரன், ஓட்டுநர் சிவகுமார் ஆகிய மூவர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்களில் கிருஷ்ணகுமார், பிரபாகரனின் உதவியாளர் ஆவார்.2009 -ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் இலங்கையில் இருந்து தப்பி இந்தியா வந்து திருச்சியில் வெளிப்பதிவு அகதியாகத் தனியாக வாடகைக்கு வீடெடுத்துத் தங்கியுள்ளார். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் சண்டையிட்டுக் காயமடைந்த தழும்புகள் அவரது உடலில் காணப்படுகின்றன.

#TamilSchoolmychoice

இவரைப் போல தப்பிய விடுதலைப்புலிகள் இந்தியா தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் தற்போதும் தொடர்பில் உள்ளனர்.அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இலங்கை சென்று மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத்ய் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காகத் தான் சயனைடு குப்பிகள் மற்றும் ஆயுதங்களை இலங்கைக்குக் கடத்திச் செல்வதாகக் கிருஷ்ணகுமார் கூறினார்.

விசாரணைக்குப் பின் அவர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுப்  பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.