Home வணிகம்/தொழில் நுட்பம் 200 தொழில்நுட்ப கருவிகளுக்கான வரியை ரத்து செய்தது உலக வர்த்தக அமைப்பு!

200 தொழில்நுட்ப கருவிகளுக்கான வரியை ரத்து செய்தது உலக வர்த்தக அமைப்பு!

638
0
SHARE
Ad

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????ஜெனீவா, ஜூலை 25 – ஜெனீவாவில் நேற்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கு பெற்ற உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization) ஆலோசனைக் கூட்டத்தில், 200 தொழில்நுட்ப கருவிகளுக்கான வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்திலும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கணினியின் சிப்களில் இருந்து மருத்துவக் கருவிகள் வரை முக்கிய தொழில்நுட்ப கருவிகளுக்கு வரி நீக்கப்படுகிறது.

18 ஆண்டுகள் வரலாறு கொண்டுள்ள தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம், கடந்த 1997-ம் ஆண்டு, 80 நாடுகளின் ஒத்துழைப்புடன் விரிவாக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அந்த ஒப்பந்தத்தில் தான் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தம் மூலம் உலகம் முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள், சுமார் 1 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது. இதில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டும், 100 பில்லியன் டாலர்கள் வருவாயை பெற இருக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்த புதிய ஒப்பந்தம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வர்த்த பிரதிநிதியான ஃமைக்கேல் ப்ரோமன் கூறுகையில், “இது அமெரிக்க தொழில்நுட்ப பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாகும். இதன் மூலம் 60,000 அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பினை பெற வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அறிவிப்பினால், பல்வேறு நாடுகளில் பொருளாதார மாற்றங்களும் நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வெகு விரைவில் கணினி, தொலைபேசி உள்ளிட்ட கருவிகளின் விலைகளும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.