Home நாடு சரவாக் ரிப்போர்ட் செய்திகளை மறுபிரசுரம் செய்தால் நடவடிக்கை – அமைச்சு எச்சரிக்கை

சரவாக் ரிப்போர்ட் செய்திகளை மறுபிரசுரம் செய்தால் நடவடிக்கை – அமைச்சு எச்சரிக்கை

644
0
SHARE
Ad

sarawak-report_1mdb_600கோலாலம்பூர், ஜூலை 25 – தடை செய்யப்பட்டுள்ள சரவாக் ரிப்போர்ட் தளத்தில் வெளியான தகவல்களை மறுபிரசுரம் செய்யக்கூடாது என செய்தி தளங்களுக்கு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், அவ்வாறு மறுபிரசுரம் செய்தால் 1998-ம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாக செய்தி தளங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பை நடத்தியது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம். அச்சமயம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிகணக்க சூழ்நிலைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மேற்குறிப்பிட்ட சந்திப்பு நிகழ்வின்போது, கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் தலைவர் சுல்காமெய்ன் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பாக பல்வேறு இணையதளங்களில் தவறான அர்த்தம் தொனிக்கும் தலைப்புச் செய்திகளும், கட்டுரைகளும் வெளியானது தொடர்பில் பல்லூடக ஆணையம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

மலேசியன் இன்சைடர், மலேசியாகினி, டிஜிட்டல் நியூஸ் ஆசியா, அஸ்ட்ரோ அவானி, என்.எஸ்.டி. ஆன்லைன், சினார் ஆன்லைன், த ராயா போஸ்ட், உத்துசான் ஆன்லைன், ஸ்டார் ஆன்லைன் ஆகிய செய்தித் தளங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 1998-ம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின்படி சரவாக் ரிப்போர்ட் தடை செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.