Home நாடு 1எம்டிபி விசாரணை: தனியார் நிறுவன பட்டுவாடா பணியாளர் கைது

1எம்டிபி விசாரணை: தனியார் நிறுவன பட்டுவாடா பணியாளர் கைது

466
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 26 – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் பட்டுவாடா பணியாளர் ஒருவர் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உதவும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இவர், 1எம்டிபி விசாரணை படலத்தில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது நபராகிறார்.

1MDB.27 வயதான அந்நபர் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பெந்தோங்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் உடனடியாக புத்ராஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து அவரை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. முன்னதாக அந்நபரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

hrலஞ்சம் உள்ளிட்ட புகார்கள் குறித்த, மலேசிய குற்றவியல் சட்டத்தின் 16ஆவது பிரிவின் கீழ் அந்நபர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

1எம்டிபி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஊழல் தடுப்பு ஆணையம், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இதுவரை 5 தனி நபர்களை கைது செய்துள்ளது. இவர்களுள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கைதாகியுள்ள தனியார் நிறுவன பட்டுவாடா பணியாளருக்கு  இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபருடன் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.