Home நாடு தகவல் கொண்டு வந்தவர்களை சாட வேண்டாம் – முக்ரிஸ்

தகவல் கொண்டு வந்தவர்களை சாட வேண்டாம் – முக்ரிஸ்

478
0
SHARE
Ad

mukrizகோலாலம்பூர், ஜூலை 27 – செய்திகள் மோசமாக இருப்பதன் காரணமாக அதைக் கொண்டு வந்த தகவலாளர்களை (தூதர்கள்) தலைவர்கள் சாடுவது சரியல்ல என்று டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் (படம்) தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் பல தலைவர்கள் அறிவுரைகளை விரும்புவதில்லை என்றும், அவர்கள் சொல்லும் கருத்துக்கள் கேட்பதற்கு நன்றாக இல்லை என்றும் கெடா மந்திரி பெசாரான அவர் மேலும் கூறியுள்ளார்.

“எப்போதும் இப்படியே நடந்து கொண்டிருந்தால் பிறகு மக்கள் எதையும் பேசவே தயங்குவார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் களைப்படைவார்கள். பிறகு அந்த தலைவர்கள் சிக்கல்களுக்கு தாங்களே தனித்து தீர்வு காண வேண்டியிருக்கும்.

#TamilSchoolmychoice

“எனவே எதிலும் நாம் விசாரணை நடத்த வேண்டும். தகவல் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் எல்லாம் தங்கள் தலைவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளனர்,” என்று செராஸ் அம்னோவின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை பேசிய முக்ரிஸ் தெரிவித்தார்.

ஏராளமானோர் பின்தொடர்ந்தால் மட்டுமே தலைவர்கள் வலுவாக இருக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், மலேசியர்களை முட்டாள்கள் என்று கருதினால், அது மிகப்பெரிய தவறாகிவிடும் என்றார்.

“சரியில்லாத முடிவுகளை மேற்கொண்டால், அது தொடர்பாக நடந்தவை குறித்து மக்களிடம் விவரிக்க வேண்டும். மக்களின் அறிவாற்றலை அவமதிக்கக் கூடாது. ஒருசிலர் நினைப்பதை விட அனைத்தையும் மக்களால் புரிந்து கொள்ள முடியும்,” என்றார் முக்ரிஸ்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எட்ஜ் பதிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.