Home இந்தியா பஞ்சாப் குர்தாஸ்பூர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் கண்டனம்!

பஞ்சாப் குர்தாஸ்பூர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் கண்டனம்!

550
0
SHARE
Ad

pakiகுர்தாஸ்பூர்,ஜூலை 28-நேற்று அதிகாலையில் இந்திய ராணுவ உடையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்குள் நுழைந்த தீவிரவாதிகள், வழிநெடுகிலும் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர்.

சாலையில் சென்ற பேருந்து, மருத்துவமனை, காவல்நிலையம் முதலியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் பெண் உட்பட மூன்று பேர், காவல்துறை அதிகாரி பல்ஜித்சிங்,காவலர்கள் 2 பேர், ஊர்க்காவல்படை வீரர்கள் 2 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமுற்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

12 மணி நேரச் சண்டைக்குப் பின், 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எல்லை வழியே தான் ஊடுருவி வந்தது தெரிவந்துள்ளது. மேலும்,எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களையும் தாண்டி உள்ளே நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தீவிரவாதிகள், ஜெய்ஷ் இ முஹமது தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தக் கோடூரத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றம் சுமத்தியது. ஆனால்,குர்தாஸ்பூர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மேலும், இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தான் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை எவ்விதத்திலும் பாகிஸ்தான் ஆதரிக்காது என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது, பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிற தந்திரமா என்பது விசாரணைக்குப் பின் தெரிந்துவிடும்.