Home இந்தியா கலாமின் நல்லுடலை மோடி பெற்றுக் கொள்கிறார் – டெல்லியில் இறுதி அஞ்சலி!

கலாமின் நல்லுடலை மோடி பெற்றுக் கொள்கிறார் – டெல்லியில் இறுதி அஞ்சலி!

540
0
SHARE
Ad

1(1)புதுடெல்லி, ஜூலை 28 – ஷில்லாங் பெத்தானியா மருத்துவமனையில் நேற்று இரவு காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நல்லுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது.

ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு, ஹெலிகாப்டர் மூலமாக எடுத்து வரப்பட்ட கலாமின் நல்லுடன், அங்கிருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாக கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கலாமின் நல்லுடலைப் பெற்றுக்கொள்கிறார்.

#TamilSchoolmychoice

அவரது மறைவை அறிந்த உலகத் தலைவர்கள், இரங்கல் தெரிவித்து வருவதோடு, உலகெங்கும் வாழும் இந்திய மக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.