Home நாடு நான் பதவி ஓய்வா? – கனி பட்டேல் அதிர்ச்சி

நான் பதவி ஓய்வா? – கனி பட்டேல் அதிர்ச்சி

566
0
SHARE
Ad

gani-patail-july27கோலாலம்பூர், ஜூலை 28 – உடல்நலக் கோளாறுகள் காரணமாக சட்டத்துறைத் தலைவர் பதவியில் இருந்து தான் பதவி ஓய்வு பெறுவதாக வெளிவந்துள்ள செய்திகளை டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல் மறுத்துள்ளார்.

இன்று காலை அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ‘தி மலாய் மலாய்’ இணைதளத்தில் கனி கூறியுள்ளார்.

எனினும், இது குறித்து தான் எதுவும் தற்போதைக்கு பேச விரும்பவில்லை என்றும் கனி தெரிவித்துள்ளார்.