Home இந்தியா உறவினர்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு: கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம்!

உறவினர்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு: கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம்!

461
0
SHARE
Ad

apj-abdul-kalamபுதுடில்லி, ஜூலை 18- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகளும் உடல் அடக்கமும் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் நடக்கவேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் முதலான உறவினர்களும், ஊர் மக்களும், ஜமாத் தலைவரும் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

அப்துல் கலாமின்  இறுதிச் சடங்குகள் ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று   மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்றிரவு ஏழு மணியளவில் அவரது உடல் ராமேஸ்வரத்திற்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.

#TamilSchoolmychoice

நாளை மதியம் 12.30 மணியில் இருந்து இரவு ஏழு மணி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

நாளை மறுநாள் காலை 10.30 மணியளவில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.