Home நாடு புதிய அமைச்சரவை: துணைப் பிரதமராக சாஹிட் பெயர் அறிவிப்பு – மொகிதின் யாசின் நீக்கம்!

புதிய அமைச்சரவை: துணைப் பிரதமராக சாஹிட் பெயர் அறிவிப்பு – மொகிதின் யாசின் நீக்கம்!

733
0
SHARE
Ad

zahid-muhyiபுத்ராஜெயா, ஜூலை 28 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்த புதிய அமைச்சரவைப் பட்டியலின் படி, துணைப்பிரதமர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக நாட்டின் துணைப்பிரதமராக டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நஜிப், மொகிதினை பதவியில் இருந்து நீக்குவதற்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் அமைச்சரவை ஒற்றுமையாகச் செயல்பட அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice