Home நாடு “இது கடவுளின் உத்தரவு” – துணைப்பிரதமர் சாஹிட் ஹமிடி

“இது கடவுளின் உத்தரவு” – துணைப்பிரதமர் சாஹிட் ஹமிடி

528
0
SHARE
Ad

zahidபுத்ரா ஜெயா, ஜூலை 29 – டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு மாற்றாக தாம் துணைப் பிரதரமாகப் பதவியேற்றிருப்பது கடவுளின் உத்தரவு என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிடி ஹமிடி தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பின்னர், புன்னகை கூடிய முகத்துடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் அரசியலில் நுழைந்தது முதற்கொண்டு பிரதமர் நஜிப்பிடம் இருந்து எந்தவொரு பதவியையும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

“இது கடவுளின் உத்தரவு என்பதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. நானும் பிரதமர் நஜிப்பும் நீண்ட தூரத்தை கடந்து வந்திருக்கிறோம். அவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது அவரது அரசியல் செயலாளராகப் பணியாற்றினேன்.”

#TamilSchoolmychoice

“அதற்குப் பிரதிபலனாக நான் அவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடவுள் என் தலையெழுத்தை தீர்மானித்துள்ளார்,” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சாஹிட் ஹமிடி.

துணைப் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள அவர் நாட்டின் உள்துறை அமைச்சராக இன்னும் நீடிக்கிறார். அதேசமயம் மொகிதினை அமைச்சரவையிலை இருந்து விடுவிப்பது அவ்வளவு சுலபமாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல என்றார் ஹமிடி.

“அமைச்சரவை சகாக்கள், அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் நஜிப்பின் தலைமைத்துவத்துக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய பொறுப்பை அளித்துள்ள பிரதமருக்கு நன்றி. இந்தப் பொறுப்பில் இருந்து மக்களுக்கும் நாட்டுக்குமான எனது கடமைகளை சரியாகச் செய்ய வேண்டியுளள்து,” என்று சாஹிட் ஹமிடி மேலும் கூறினார்.