Home நாடு அமைச்சரவை மாற்றம்: 5 அமைச்சர்கள் நீக்கம் – 7 புதிய நியமனங்கள்

அமைச்சரவை மாற்றம்: 5 அமைச்சர்கள் நீக்கம் – 7 புதிய நியமனங்கள்

622
0
SHARE
Ad

najib1கோலாலம்பூர், ஜூலை 29 – புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்டார்.

அதில், துணைப்பிரதமர் உட்பட 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முழு அமைச்சர்களாக 2 புதிய முகங்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே வேளையில், துணையமைச்சர்களாக 9 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்கள்:

1.டான்ஸ்ரீ மொகிதின் யாசின் – துணைப்பிரதமர் – கல்வியமைச்சர்)

2. டத்தோஸ்ரீ முகமட் ஷபி அப்டால் – கிராமப்புற வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சர்

3. டத்தோஸ்ரீ ஹசான் மாலிக் – உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு, பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர்

4.டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் – இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்

5. டத்தோ டாக்டர் எவோன் எபின் – அறிவியல், தொழில்நுட்பம் புத்தாக்கத்துறை அமைச்சர்

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள 7 அமைச்சர்கள்

1. டத்தோஸ்ரீ மஹாட்சிர் காலிட் – கல்வியமைச்சர்

2. டத்தோ ஹம்சா சைனுடின் – உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு, பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர்

3.டத்தோ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபர் – இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்

4. டத்தோ வில்ஃபிரட் மாத்யூஸ் தங்காவ் – அறிவியல், தொழில்நுட்பம் புத்தாக்கத்துறை அமைச்சர்

5. டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் சாலே துன் சைட் கெருவாக் – தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர்

6. டத்தோஸ்ரீ அசாலினா ஓஸ்மான் சைட் – பிரதமர் துறை

7. டத்தோஸ்ரீ ஆங் கா சுவான் – அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள துணையமைச்சர்கள்

1. டத்தோ வீரா முகமட் ஜொஹாரி பகாரோ – தற்காப்புத்துறை

2. டத்தோ மாஸ் எர்மியாதி சம்சுதின் – சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை

3. டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் – பிரதமர் துறை

4. டத்தோ அஸ்ராவ் வஜ்டி டுசுக்கி – பிரதமர் துறை – சமயப் பிரிவு

5. சோங் சின் வூன் – கல்வித்துறை

6. டத்தோஸ்ரீ ரிசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் – வெளியுறவுத்துறை

7. டத்தோ அகமட் ஜஸ்லான் யாக்கோப் – கிராமப்புற, வட்டாரம், மேம்பாட்டுத்துறை

8. துவான் மசீர் குசாட் – உள்துறை

9. டத்தோ ஜொஹாரி அப்துல் கனி – நீதித்துறை

இந்த புதிய நியமனங்களைத் தவிர மற்ற அமைச்சர்களும், துணையமைச்சர்களும் தாங்கள் ஏற்கனவே நியமிக்கப் பட்டிருந்த துறையிலே பணியைத் தொடர்வார்கள் என அரசு அறிவித்துள்ளது.