Home நாடு டத்தோ பட்டம் வாங்கித் தருவதாக மோசடி: இருவர் குற்றச்சாட்டை மறுத்தனர்

டத்தோ பட்டம் வாங்கித் தருவதாக மோசடி: இருவர் குற்றச்சாட்டை மறுத்தனர்

431
0
SHARE
Ad

Crime-Pixகோலாலம்பூர், ஜூலை 29 – ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பெற்ற வரும், தனித்து வாழும் தாய் ஒருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை கோரினர்.

கிளந்தானில் டத்தோ பட்டம் பெற்றுத் தருவதாகக் கூறி, 705,000 ரிங்கிட் அளவிற்கு மோசடி செய்ததாக இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி மட் கானி அப்துல்லா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்த போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள சாகாருடின் அவாங் யாயா (60 வயது) மற்றும் நோர்சிகான் சைனல் அபிடின் (53 வயது) ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

#TamilSchoolmychoice

கிளந்தான் அரசியல் சாசனத்திற்கு எதிரான வகையில், டத்தோ பட்டம் பெற்றுத் தருவதாகக் கூறி, குறிப்பிட்ட ஆறு நபர்களை இருவரும் மோசடி செய்தனர் என்பது முதல் குற்றச்சாட்டாகும்.

இருவரும் அளித்த வாக்குறுதியை நம்பி அக்குறிப்பிட்ட ஆறு பேரும் கடந்தாண்டு ஆகஸ்ட் தொடங்கி இந்தாண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 545,000 ரிங்கிட் தொகையை அளித்துள்ளனர்.

மேலும் இரு நபர்களிடம் இதேபோல் மோசடி செய்து 160,000 ரிங்கிட் தொகையை பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டப் பிரிவு 420ன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் இருவருக்கும் 14 ஆண்டுகால சிறை மற்றும் பிரம்படி கிடைக்கக்கூடும்.

இந்நிலையில் இருவருக்கும் தலா 80,000 ரிங்கிட்  பிணைத் தொகை நிர்ணயித்த நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.