பாட்னா, ஜூலை 29- உலக மக்கள் அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பெயரை என்றென்றும் நினைவு கூரும் விதத்தில், பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் நகரில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரிக்கு அப்துல் கலாமின் பெயரைச் சூட்டியுள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
இந்தியாவில் நலிந்து வரும் வேளாண்மையை மீட்டெடுக்கும் ஆவல் கொண்டிருந்தார் அப்துல்கலாம். இந்தியாவின் அடிப்படை ஆதாரமான விவசாயம் அழிந்து வருவது கண்டு துயரடைந்த அப்துல் கலாம், பசுமைப் புரட்சியை மக்கள் மத்தியிலும் மாணவர் மத்தியிலும் விதைக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.
வீடுகள் தோறும், தெருக்கள் தோறும், ஊர்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வலியுறுத்தி, தானும் மரக்கன்றுகளை நட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார்.
அத்தகைய பெருந்தகையின் பெயரை வேளாண்மைக் கல்லூரிக்குச் சூட்டியது சாலப் பொருத்தமாகும்.