Home இந்தியா அப்துல் கலாம் நல்லுடலைப் பெறத் தயார் நிலையில் ஆளுநர் ரோசய்யா காத்திருக்கிறார்

அப்துல் கலாம் நல்லுடலைப் பெறத் தயார் நிலையில் ஆளுநர் ரோசய்யா காத்திருக்கிறார்

467
0
SHARE
Ad

rsz_apj-abdul-kalam1மதுரை, ஜூலை 29- டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்படும் அப்துல் கலாமின் உடலைப் பெற, மதுரை விமான நிலையம் தயார் நிலையில் உள்ளது. அப்துல் கலாம் அவர்களின் உடலைத் தமிழக அரசு சார்பில் கவர்னர் ரோசய்யா மற்றும் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் பெறத் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.

இதனால், விமான நிலையத்தைச் சுற்றி 5 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அப்துல்கலாமின் உடலைத் தாங்கி வரும் சிறப்பு விமானம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

கலாம் அவர்களின் உடலை வரவேற்க, தமிழகப் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் ஆகியோரும் விமான நிலையம் சென்றுள்ளனர்.