Home நாடு பேரரசர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள், துணையமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம்!

பேரரசர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள், துணையமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம்!

722
0
SHARE
Ad

istana-negaraகோலாலம்பூர், ஜூலை 29 – அமைச்சரவை மாற்றங்கள் நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் இன்று கோலாலம்பூரிலுள்ள இஸ்தானா நெகாராவில் பேரரசர் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்வில், உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு, பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் டத்தோ ஹம்சா சைனுடின், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபர், கல்வியமைச்சர்  டத்தோஸ்ரீ மஹாட்சிர் காலிட், தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் சாலே துன் சைட் கெருவாக்,  பிரதமர் துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ அசாலினா ஓஸ்மான் சைட், இரண்டாவது அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆங் கா சுவான் ஆகியோர் தங்களது பதவிப் பிரமாணங்களை எடுத்துக் கொண்டனர்.

அறிவியல், தொழில்நுட்பம் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோ வில்ஃபிரட் மாத்யூஸ் தங்காவ், தற்சமயம் இத்தாலியில் இருப்பதால் அவர் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள துணையமைச்சர்களான, டத்தோ வீரா முகமட் ஜொஹாரி பகாரோ – தற்காப்புத்துறை, டத்தோ மாஸ் எர்மியாதி சம்சுதின் – சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை, டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் – பிரதமர் துறை, டத்தோ அஸ்ராவ் வஜ்டி டுசுக்கி – பிரதமர் துறை – சமயப் பிரிவு, சோங் சின் வூன் – கல்வித்துறை, டத்தோஸ்ரீ ரிசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் – வெளியுறவுத்துறை ஆகியோரும் பதவிப் பிரமாணங்கள் எடுத்துக் கொண்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி ஆகியோர் கலந்து கொண்டனர்.