கோலாலம்பூர், ஜூலை 30 – மறைந்த முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழகத்தின் இராமேஸ்வரம் நகரில் இன்று நல்லடக்கச் சடங்குகள் நடைபெற்று, இலட்சக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்திய அதே வேளையில், இன்று காலை முதல் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அன்னாரின் மறைவுக்காக மலேசியர்கள் தங்களின் அனுதாபச் செய்திகளைத் தெரிவிக்கும் வண்ணம் அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டது.
இன்று காலை இந்தியத் தூதரகத்திற்கு வருகை தந்த மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும், சில மஇகா தலைவர்களும், அப்துல் கலாம் மறைவிற்காக அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
அனுதாபப் புத்தகத்தில் சுப்ரா கையெழுத்திடுகின்றார். அருகில் இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, டத்தோ கே.ஆர்.ஏ.நாயுடு, மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜா, பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, மஇகா மகளிர் பகுதித் தலைவி மோகனா முனியாண்டி.
அப்துல் கலாம் படத்திற்கு முன்னால் அஞ்சலி செலுத்தி செலுத்தும் டாக்டர் சுப்ரா, இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி மற்றும் மஇகா தலைவர்கள்…