Home இந்தியா கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர்!

கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர்!

553
0
SHARE
Ad

Ummenchandy-1-Newskeralaதிருவனந்தபுரம், ஜூலை 30- அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாகக் கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.

நேற்று கூடிய கேரள சட்டசபைக் கூட்டத்தின் போது இவ்வறிவிப்பை வெளியிட்டார் உம்மன் சாண்டி.

ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கும் மேலாக அப்துல் கலாம் அவர்கள், கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றியவர்.

#TamilSchoolmychoice

ஆகவே, அவரைக் கெளரவிக்கும் வகையில் கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் எனப் பெயரிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் முட்டல் மோதல் இருந்தாலும், அடிப்படையில் தமிழனாக இருந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாமின் சேவையை மறக்காமல், நன்றியோடு அவரைக் கெளரவிக்க நினைத்த கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி பாராட்டப்படக் கூடியவர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அப்துல் கலாமின் உடலைக் கேரளாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த அவரது பண்பு  மதிக்கப்பட வேண்டியதாகும்.