கொழும்பு, ஜூலை 30- அமெரிக்க அதிபர் ஒபாமா, சிங்கப்பூர் லீ குவான் யூ, மலேசியப் பிரதமர் நஜிப் முதலான உலகத் தலைவர்கள் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர்.
ஆனால், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அப்துல் கலாமின் மறைவிற்குத் தனது இரங்கல் செய்தியை வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார்.
அவர் இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு, அங்கிருந்த சிறப்புப் பதிவேட்டில் தனது இரங்கல் செய்தியைப் பதிவுசெய்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், இரங்கல் கடிதம் எழுதி, அதை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் நேரிடையாகக் கொடுக்குமாறு கூறி, இந்து சமய விவகாரத்துறை அமைச்சர் சுவாமிநாதனை டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்மூலம், எல்லோராலும் விரும்பப்படுகின்ற, ஏன் எதிரிகளும் கூட நேசிக்கின்ற பெருமை மிக்க தலைவர் அப்துல்கலாம் என்பது புலனாகும்.