சென்னை, ஜூலை 30- அப்துல் கலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாகக் கருதுவதாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் உருக்கமும் பெருமிதமுமாகக் கூறியுள்ளார்.
“மாணவர்களுக்காகத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்தவர்; மாணவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம்.
மகாத்மா காந்தி, பாரதியார், காமராஜர் இப்படிப்பட்ட மகான்களை எல்லாம் நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், கலாம் அவர்களை அவர்கள் ரூபத்தில் நேரில் பார்த்தேன்.
அப்படிப்பட்ட மகாத்மாவான கலாம் காலத்தில் வாழ்வதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.
மிகப் பெரிய உயரத்திற்குப் போனாலும் எளிமையாகவே வாழ்ந்த உத்தமரைக் கடவுள் அமைதியாக அன்போடு அரவணைத்துக் கொண்டார்.
அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அப்துல் கலாமின் மறைவிற்குத் தன் அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.