Home உலகம் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 4 இந்தியப் பேராசிரியர்களில் இருவர் மீட்பு!

ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 4 இந்தியப் பேராசிரியர்களில் இருவர் மீட்பு!

566
0
SHARE
Ad

368155_ISIS-Militantsலிபியா, ஜூலை 31- ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 4 இந்தியப் பேராசிரியர்களில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

லிபியா தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த 4 பேராசிரியர்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அவர்கள் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினரைக் கடத்திப் பிணையத் தொகை வசூலித்து வருகின்றனர். சிலரைத் தலை துண்டித்துப் படுகொலை செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதனால் மிகுந்த பதற்றம் உண்டானது. அவர்களைப் பத்திரமாக மீட்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் தற்போது லட்சுமிகாந்த், விஜயகுமார் ஆகிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பத்திரமாக சிர்தே பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரையும் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.