சிங்கப்பூர், ஜூலை 31 – மலேசியாவின் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மலேசிய அரசின் நிலைத்தன்மையின் மீது பெரிய அளவிலான நம்பிக்கை உள்ளது” என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.
லீ சியான் லூங், சமீபத்திய மலேசிய அரசியல் நிலவரம், சிங்கப்பூரில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேட்கப்பட்டதற்கு, “மலேசிய அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது அரசியல் அசம்பாவிதங்கள் மட்டுமல்லாமல் சமுதாய ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மலேசியா, புவியியல் ரீதியாக மட்டும் சிங்கப்பூரின் நெருங்கிய நாடல்ல. வர்த்தக ரீதியாகவும், முதலீட்டு ரீதியாகவும் மிக நீண்ட கால உறவு கொண்டுள்ளது.”
“சிங்கப்பூரில் வசிக்கும் பலர் அங்கு வேலை செய்கின்றனர். மலேசியர்கள் பலர் இங்கு பணியில் உள்ளனர். அதனால், மலேசியாவில் ஏற்படும் பாதிப்புகள், சிங்கப்பூரில் எதிரொலிக்கும். ஒருவேளை பாதிப்புகள் ஏற்பட்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எங்களுக்கு மிகப் பெரிய கவலை உள்ளது.”
“எனினும், தற்சமயம் மலேசிய அரசியல் நிலையாகவே உள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் நல்லதொரு பிணைப்பு உள்ளது. மலேசிய பிரதமர் நஜிப்புடன் எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உள்ளது. அதனால், இரு நாடுகளின் ஒத்துழைப்பு நீண்ட காலத்திற்கு தொடர்ந்து இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.