Home நாடு உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களையுங்கள் – நஜிப்புக்கு டேவிட் கேமரூன் அறிவுறுத்து

உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களையுங்கள் – நஜிப்புக்கு டேவிட் கேமரூன் அறிவுறுத்து

578
0
SHARE
Ad

David+Cameronபுத்ரா ஜெயா, ஆகஸ்ட் 1  – நேற்று முன்தினம் வியாழக்கிழமை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் களைந்து மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிக்கையான ‘தி டெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

புத்ராஜெயாவில் நேற்று முன்தினம் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்த டேவிட் கேமரூன், அரசாங்கத்தையே கவிழ்க்கும் அளவிற்கு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள 1எம்டிபி ஊழல் குறித்து பேசியுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பிரபல பத்திரிக்கை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்திற்கும், மலேசியாவிற்கும் இடையே வர்த்தக ரீதியான தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் தான் டேவிட் கேமரூன் மலேசியா வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

என்றாலும், 1எம்டிபி விவகாரத்தில் 2.6 பில்லியன் ரிங்கிட் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ள விவகாரம் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருப்பதால், வர்த்தக ரீதியான தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் த டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.

நஜிப்புடனான இந்த தனிப்பட்ட சந்திப்பில் ‘நஜிப் தன் மீதான குற்றச்சாட்டுகளையும், அரசாங்கத்தின் மீதான கறைகளையும் தெளிவு படுத்த வேண்டும்’ என்று டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மருத்துவ சிகிச்சைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் படியும் நஜிப்பிடம் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.