Home இந்தியா இனி 10 ரூபாயில் அண்டிரொய்டு செயலிகள்!

இனி 10 ரூபாயில் அண்டிரொய்டு செயலிகள்!

509
0
SHARE
Ad

play-storeபுது டெல்லி, ஆகஸ்ட் 1 – இந்திய சந்தைகளை குறி வைத்து, ஆப்பிள் தனது ஐஓஎஸ் செயலிகளை 10 ரூபாய் முதல் விற்பனை செய்ய இருப்பதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, அண்டிரொய்டு செயலிகளும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அண்டிரொய்டு செயலிகள் தொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய சந்தைகள், மேம்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளை வழங்கிய வண்ணம் உள்ளன. அதனால், இந்திய சந்தைகளில் சிறப்பான முன்னேற்றத்தை அடைய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கூகுள் ப்ளே பயனாளிகள், இனி 10 ரூபாய்க்கு அண்டிரொய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு தொடர்பாக கூகுள் ப்ளேவின் தயாரிப்பு மேலாளர் அலிஸ்டர் பாட் கூறுகையில், “இனி அண்டிரொய்டு மேம்பாட்டாளர்கள் தங்கள் செயலிகளுக்கு குறைந்தபட்ச தொகையாக 10 ரூபாயை நிர்ணயம் செய்து கொள்ள முடியும். இந்த குறைந்தபட்ச தொகை மூலம், கட்டணம் செலுத்தி செயலிகளை பதிவிறக்கம் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.