Home இந்தியா இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு!

626
0
SHARE
Ad

iocl-petrol-pump-mumbaiபுதுடெல்லி,ஆகஸ்டு 1- இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளை(சிலிண்டர்) விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.52–ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.78–ம் குறைக்கப்பட்டுள்ளது.

டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 43 காசும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 60 காசும் குறைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.29–ல் இருந்து ரூ.64.77 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.51.08–ல் இருந்து ரூ.47.30 ஆகவும் குறைந்தது.

அதேபோல்,, மானியம் இல்லாத14 புள்ளி 2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை, 23 ரூபாய் 50 காசு குறைந்திருக்கிறது. ஜூலை மாதம் 627 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மானியம் இல்லாத எரிவாயு விலை, 603 ரூபாய் 50 காசாகக் குறைந்துள்ளது.

பல மாதங்களுக்குப் பின்னர் சமையல் எரிவாயு உருளையின் விலை 2 முறை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கடந்த ஜூலை மாதம் 16–ந் தேதி பெட்ரோல், டீசல் ஆகியவை லிட்டருக்குத் தலா ரூ.2 குறைந்தது குறிப்பிடத்தக்கது.