Home நாடு கண்டெடுக்கப்பட்டது எம்எச்370-ன் பாகம் தானா? இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு!

கண்டெடுக்கப்பட்டது எம்எச்370-ன் பாகம் தானா? இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு!

770
0
SHARE
Ad

MH370புத்ராஜெயா, ஆகஸ்ட் 1 – ரியூனியன் தீவுப் பகுதியையொட்டிய இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம், மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச் 370 விமானத்தின் பாகமா என்பது ஓரிரு தினங்களில் உறுதி செய்யப்படும் என போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அசிஸ் கப்ராவி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த சிதைந்த விமான பாகத்தை ஆய்வு செய்ய மலேசிய குழுவொன்று சென்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு மீட்டர் நீளமுள்ள அப்பாகம் தற்போது பிரான்ஸின் டுலுஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகக் கூறினார்.

“அது ஒரு சிறிய பாகம்தான். எனவே மலேசிய குழுவால் அதை எளிதில் அடையாளம் காண முடியும்,” என்றார் அப்துல் அசிஸ் கப்ராவி.

#TamilSchoolmychoice

மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமைச் செயலர் அசாருடின் அப்துல் ரகுமான் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு டுலுஸ் நகருக்குச் சென்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அங்குள்ள பிரெஞ்சு விமான போக்குவரத்து புலனாய்வு முகமையுடன் மலேசிய குழு இணைந்து செயல்படும் என்றார்.

இதற்கிடையே இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகம், எம்எச்370 விமானத்தினுடையதுதான் என ஆஸ்திரேலிய மீட்புக்குழுவினர் உறுதியாக நம்புவதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அப்துல் அசிஸ் கப்ராவி, “டுலுஸ் சென்றுள்ள மலேசிய குழுவினர் இதுகுறித்து தகவல் தெரிவிக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டும்,” என்றார்.

படம்:EPA