Home உலகம் ரியூனியன் தீவில் எரிமலை வெடிப்பு: எம்எச்370 விசாரணை பாதிப்பு

ரியூனியன் தீவில் எரிமலை வெடிப்பு: எம்எச்370 விசாரணை பாதிப்பு

1430
0
SHARE
Ad

krakatau-eruption-450x299ரியூனியன் தீவு, ஆகஸ்டு 1 – போயிங் 777 இரக விமானத்தின் சிதைந்த பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள ரியூனியன் தீவில், தற்போது எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.

ரியூனியன் தீவில் உள்ள ‘பிட்டான் டி லா போர்நாய்சே’என்னும் எரிமலை நேற்று வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.

இதனால், அப்பகுதிக்குப் பொதுமக்கள் எவரும் செல்லக் கூடாதென ரியூனியன் தீவில் அரசு தடை விதித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், எரிமலைப் பகுதியில் பறக்க, ஹெலிகாப்டர் முதலான விமானப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ள சிதைந்த பாகம் எம்எச்370-தின் பாகம் தான் என நம்பப்படும் நிலையில், அந்தப் பகுதியில், விமானத்தின் வேறு ஏதாவது பாகங்கள் கிடைக்கிறதா என்பதைத் தேடும் பணி தடைபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.