Home Featured கலையுலகம் ‘மறவன்’ – திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

‘மறவன்’ – திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

1181
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – எஸ்டி புவனேந்திரன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘மறவன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் பார்வை முன்னோட்ட வெளியீடு (First look teaser) கடந்த சனிக்கிழமை இரவு கிள்ளானில் நடைபெற்றது.

இந்த முன்னோட்ட வெளியீட்டில் மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் தில்லாலங்கடி, வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவரான எஸ்.டி.புவனேந்திரன், மலேசிய சூழலுக்கு ஏற்றவாறு ‘மறவன்’ திரைப்படத்தின் கதையை உருவாக்கி, அதில் மலேசியாவின் பிரபலக் கலைஞர்களை நடிக்கவைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தத் திரைப்படத்தில், ஹரிதாஸ், டேனிஸ்குமார், குமரேசன், கவிதா தியாகராஜன், புஸ்பா நாராயண், சங்கீதா கிருஷ்ணசாமி, சீலன் ஆகியோரை முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மறவன்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இங்கே காணலாம்: