Home Featured நாடு ரியூனியன் தீவு: மலேசியத் தயாரிப்பு தண்ணீர் பாட்டில்கள் கண்டுபிடிப்பு!

ரியூனியன் தீவு: மலேசியத் தயாரிப்பு தண்ணீர் பாட்டில்கள் கண்டுபிடிப்பு!

772
0
SHARE
Ad

MH370கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – ரியூனியன் தீவில் கடந்த வாரம் வியாழக்கிழமை, போயிங் 777 இரக விமானத்தின் சிதைந்த இறக்கையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தீவில், மாயமான எம்எச்370 விமானத்திற்குத் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பல பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

இதனை அறிந்த அந்தத் தீவில் வாழும் தன்னார்வலர்களும், தேடல் குழுவினரோடு இணைந்து ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கிரெய்சன் பிலிப் என்ற வழக்கறிஞர் தனது டுவிட்டர் பதிவில், மலேசியத் தயாரிப்பு தண்ணீர் பாட்டில்களைக் கண்டறிந்துள்ளார்.

#TamilSchoolmychoice

கேக்டஸ் (Cactus), லைப் (Life) போன்றவை மலேசியாவில் தயாரிக்கப்படும் தண்ணீர் பாட்டில்களாகும். அதோடு, தாய்வான் நாட்டு தயாரிப்பு தண்ணீர் பாட்டில் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்தப் பாட்டில்கள் மாயமான எம்எச்370 விமானத்தில் இருந்தவையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.